உக்ரைன் நாட்டின் ராணுவத்திற்கு எலான் மஸ்க் மேலும் 15,000 இணையதள கருவிகளை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா, உக்ரேன் நாட்டின் மீது 100 நாட்களை கடந்து தீவிரமாக போர்தொடுத்து கொண்டிருக்கிறது. எனவே, உக்ரைன் நாட்டிற்கு மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் நிதி உதவிகளும் ஆயுத உதவிகளும் செய்து கொண்டிருக்கின்றன. இதேபோன்று எலான் மஸ்க் தன்னுடைய ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் மூலமாக இணைய சேவைகளை செயற்கைக்கோள் வழியே அந்நாட்டிற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது உக்ரைன் நாட்டின் ராணுவம் பயன்படுத்துவதற்காக ஸ்டார்லிங்க் செயற்கைகோள் இணையதள கருவிகளை அனுப்பியிருக்கிறார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டிற்கு சுமார் 15,000 இணையதள கருவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் பத்தாயிரம் கருவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், சூரிய ஆற்றலின் மூலமாக மின்சாரம் பெறக்கூடிய டெஸ்லா கருவிகளை அந்நாட்டு ராணுவத்திற்கும் அனுப்பி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.