Categories
உலக செய்திகள்

41 கோடி குறைத்து…. வீட்டை விற்க திட்டமிட்டுள்ள…. உலகின் முன்னணி பணக்காரர்….!!

உலகின் முன்னணி பணக்காரரான Elon Musk தான் வசிக்கும் மாளிகையை 41 கோடி குறைத்து விற்க திட்டமிட்டுள்ளார்.

உலக பணக்கார பட்டியலில் முன்னணி வகுக்கும் Elon Musk, கலிபோர்னியா நாட்டில் தான் வசித்து வருகிற மாளிகையை விற்பதற்கு திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் 16,000 சதுரஅடி பரப்பளவில் அமைந்துள்ள மாளிகையின் விலையை ₹41 கோடி குறைத்து ₹241 கோடிக்கு விற்க Elon Musk திட்டமிட்டுள்ளார்.

மேலும் Elon Muskஇன் மொத்த சொத்து மதிப்பு 225 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என ப்ளூம்பெர்க் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஜூன் மாதம், Elon Musk தனது ட்விட்டர் பக்கத்தில், “சொந்தமாக உள்ள கடைசி வீட்டை விற்க முடிவு எடுத்துள்ளேன். பெரிய குடும்பத்திற்குதான் அந்த வீடு செல்ல வேண்டும். அது ஒரு சிறப்பான இடம்” என பதிவிட்டார்.

அதோடு கடந்த ஆண்டு Elon Musk நிறைய சொத்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரது சொத்துக்களை விற்கவுள்ளதாக அறிவித்தார். மேலும் Elon Muskஇன் கலிபோர்னியா Hillsborough-வில் உள்ள 47 ஏக்கர் வீட்டில், 7 படுக்கை அறைகள் மற்றும் 10 குளியல் அறைகள் உள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 1916 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த வீட்டில் நூலகம், இசை அறை, முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட சமையலறை மற்றும் நீச்சல் குளங்களும் உள்ளன.

மேலும் கடந்த ஜூன் மாதம் Elon Musk “நிகழ்ச்சிக்காக வீடு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அது விற்கப்படும் நிலையில் பெரிய குடும்பம் அதை வாங்கவில்லை எனில் வீடு முழுமையாக பயன்படாது. ஒரு நாள் அது நடைபெறும்” என கூறினார். உலகின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பான டெஸ்லா நிறுவனத்தின் தலைமையகம் சிலிக்கான் வேலியிலிருந்து தொழிலாளர்களின் வசதிக்கேற்ப டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்ற இருப்பதாக Elon Musk கூறியுள்ளார்.

Categories

Tech |