உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தன் டெஸ்லா நிறுவனத்தில் பணி வேண்டுமா? என்று ட்விட்டரில் விளம்பரம் செய்திருக்கிறார்.
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க், தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாக பரவி கொண்டிருக்கிறது. அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, ஹார்ட்கோர் வழக்குத் துறையை டெஸ்லா நிறுவனத்தில் அமைத்திருக்கிறோம்.
Tesla is building a hardcore litigation department where we directly initiate & execute lawsuits. The team will report directly to me.
Please send 3 to 5 bullet points describing evidence of exceptional ability.
— Elon Musk (@elonmusk) May 20, 2022
அதன் மூலம் நேரடி முறையில் வழக்குகளை தொடங்க உள்ளோம். அந்த அமைப்பு, என்னிடம் தெரிவிக்கும். இந்த திறனுக்குரிய சான்றுகளை விளக்கக்கூடிய 3-லிருந்து 5 பதில்களை அனுப்பலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார். பலரும் இதற்கான பதிலை பதிவிட்டு கொண்டிருகிறார்கள்.