ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்தியவுடன் எலான் மஸ்க் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை அறிவித்திருக்கிறார்.
உலக பணக்காரர்களில் ஒருவராக விளங்கும் எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் நிறுவனராக இருக்கிறார். இந்நிலையில், ட்விட்டர் என்னும் பிரபல சமூக ஊடக நிறுவனத்தை வாங்கி விட்டார். அதனையடுத்து பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், ட்விட்டர் இயக்குனர் குழுவை நீக்கிவிட்டார். அந்த குழுவில் இருக்கும் ஒன்பது நபர்களையும் ஒரே நேரத்தில் அதிரடியாக நீக்கினார். மேலும், தான் மட்டுமே அந்த குழுவில் இப்போது உள்ளதாவும், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் தான் இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்பே ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் போன்ற நிர்வாகிகள் பலரை அவர் நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.