உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் 8.6 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் அதன் உரிமையாளரும், உலகின் நம்பர்-1 பணக்காரரருமான எலான் மஸ்க் சொத்து மதிப்பில் ரூ.1,11000 கோடி குறைந்துள்ளது. அவர் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் கண்ட வீழ்ச்சியால் இந்த நிலைமைக்கு வந்துள்ளார். இதனால் இவர் ஒரே நாளில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளார்.
மேலும் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பணத்தை விட பிட்காயினே மேல் என்று பதிவிட்டிருந்தார். இவரது சரிவுக்கு இதுவே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இவர் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலகின் நம்பர் 1 பணக்காரராக அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் மீண்டும் முதல் இடத்திற்கு வந்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 13,60,000 கோடி ஆகும்.