Categories
உலக செய்திகள்

கரையை கடந்த “எல்சா”… 25 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

எல்சா’ புயல் பாதிப்பு காரணமாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 25 ஆயிரம் வீடுகளுக்கு மின் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5-ஆம் தேதி கியூபா தீவை தாக்கிய ‘எல்சா’ புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டைலர் கவுண்டி பகுதியில் நேற்று முன்தினம் கரையை கடந்துள்ளது. மேலும் எல்சா புயலால் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பல பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் சுமார் 25 ஆயிரம் வீடுகளுக்கு மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே வலுவிழந்த எல்சா புயல் ஜார்ஜியா மாகாணத்தை 50 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து சென்றுள்ளது. அதன்பிறகு 45 கிலோமீட்டர் வேகத்தில் மணிக்கு காற்றின் வேகம் குறைந்துள்ளது. இந்த நிலையில் ஜார்ஜியாவில் தொடர்ந்து தற்போது மழை பெய்து வருவதாகவும், ‘எல்சா’ புயல் தெற்கு கரோலினா மாகாணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |