Categories
சென்னை மாவட்ட செய்திகள்

24 மணி நேரத்தில் எத்தனை பிரசவம் தெரியுமா..? சென்னை எழும்பூர் மருத்துவமனை சாதனை…!!

ஆசியாவிலேயே முதன்முறையாக 24 மணி நேரத்தில் 64 பிரசவங்களை செய்து எழும்பூர் அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

கொரோனா பரவி வரும் நிலையில் மருத்துவமனைக்கு செல்லவே மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்த சூழலிலும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல கர்ப்பிணிப் பெண்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு தனி  வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எவ்வித தொய்வும் இல்லாமல் 24 மணி நேரத்தில் 64 பிரசவங்கள் பார்த்து எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பிரசவித்த தாயும் குழந்தைகளும் நலமுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகள் மீதான பொது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. பிரசவம் பார்த்த மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவமனை இயக்குனர் விஜயா மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |