விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இதில் ராஜலட்சுமி தற்போது லைசன்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், போஸ்டர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி பேசியது தற்போது பெரும் சர்ச்சையாகவே மாறியுள்ளது. அதாவது லைசன்ஸ் திரைப்படத்தில் நடிகர் ராதாரவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் போஸ்டர் வெளியீட்டு விழாவின்போது மேடையில் பேசிய ராதா ரவி, என்னுடைய 49 வருட சினிமா வாழ்க்கையில் இதுவரை சொல்லாத கதையை இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த படத்தில் ராஜலட்சுமி பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு ராஜலட்சுமி குத்து விளக்கு ஏற்றும் போது கூட கணவர் செந்திலை அழைக்கிறார். எங்கு சென்றாலும் கணவரை உடன் அழைத்துச் செல்ல கூடாது. எதற்காக கணவரை அழைத்து வரணும். அது தொல்லை. அது உங்களின் பாதுகாப்புக்கு என்று நினைக்கலாம். ஆனால் அது தவறு. நம்மை நாம் தான் பாதுகாக்க வேண்டும். சினிமா மட்டுமல்ல அரசியல் மற்றும் அலுவலகத்திலும் நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் நடிகர் ராதாரவி கணவரை எதற்காக உடன் அழைத்து வருகிறீர்கள். அது தொல்லை என்று கூறியது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், பலரும் விமர்சித்து வருகிறார்கள்.