இமாச்சலபிரதேசத்தில் வருகிற 12-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலானது நடைபெற இருக்கிறது. அங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரசுக்கு இடையில் கடும் போட்டி ஏற்படுகிறது. இந்த இரு கட்சிகளுக்கும் இடையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பரப்புரை நேற்றுடன் முடிவடைந்தது
இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று இறுதிகட்ட பரப்புரைகளில் ஈடுபட்டனர். இதனை முன்னிட்டு இமாச்சலபிரதேசத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டர் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி அங்கு வந்தடைந்தார். இதையடுத்து பொதுக் கூட்டம் நடைபெறக்கூடிய இடத்துக்கு பிரதமர் காரில் சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு ஆம்புலன்சு அவ்வழியாக வந்தது.
இதையறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமரின் காரை சிறிது நேரம் நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழிவிட்டனர். இதனால் பிரதமரை வரவேற்கக்கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் கடந்து சென்ற பின் பிரதமரின் கான்வாய் மீண்டும் புறப்பட்டது.