இமாச்சலபிரதேசத்திலுள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வருகிற 12ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அம்ம்மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் பா.ஜ.க தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பொதுசிவில் சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்படும் என வாக்குறுதியை அளித்து தேர்தலை சந்தித்து வருகிறது.
அதே சமயம் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இதுவரையிலும் இமாச்சலபிரதேசத்துக்கு ராகுல்காந்தி, சோனியா காந்தி தேர்தல் பிரச்சாரத்துக்கு போகவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவர்கள் மட்டுமே களத்தில் இறங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வருகிற 17ஆம் தேதி முதல் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்.
2ம் கட்டத் தேர்தலில் 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. முதற்கட்டத் தேர்தலுக்கு இதுவரையிலும் 12 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இமாச்சலப்பிரதேசத்தில் வருகிற 12ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்த்துள்ளது.