Categories
சென்னை மாநில செய்திகள்

அவசர தேவைக்காக வெளியூர் செல்ல இ-மெயிலில் விண்ணப்பிக்கலாம் –  ஏ.கே. விஸ்வநாதன்! 

தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் இருந்து முக்கிய பணிகளுக்காக வெளியூர் செல்ல விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதற்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். 

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், மக்களின் நன்மைக்காகத்தான் யாரும் வெளியே செல்லக் கூடாது என்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வெளி மாவட்டம் அல்லது வெளி மாநிலங்கள் செல்ல இறப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சை போன்ற 3 காரணங்களுக்காக மட்டுமே அவசரப் பாஸ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் பொதுமக்கள் வெளியூர் செல்வது தொடர்பாக இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார். பொது மக்கள் வசதிக்காக, விண்ணப்பம் செய்வது எளிமைப்படுத்தப்படும் என்றும் வெளியூர் செல்வது தொடர்பாக உண்மைத் தன்மை விசாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவசரப் பயணங்களுக்கு மட்டுமே உடனடியாக பரிசீலித்து அவசரப் பயண பாஸ் அளிக்கிறோம் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |