பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அதிகமாக வெட்டுக்கிளிகள் படையெடுத்து சென்று பயிர்களை நாசம் செய்து வருவதால், அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து, தெற்கு பஞ்சாப், கைபர் பக்துன்க்வா உள்ளிட்ட பல பகுதிகளில், இதுவரை இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த பகுதிகளில் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 9 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு வெட்டுக்கிளிகள் பரவி பயிர்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த பல முயற்சிகள் செய்து பார்த்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
இதுதொடர்பாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தலைமையில் இஸ்லாமாபாத்தில்கூட்டம் நடைபெற்றது. இதில், வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
மேலும் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் பணிகளுக்கான ரூ 730 கோடி ஒதுக்கீடு செய்யவும் அந்தக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை பார்க்கும் போது சூர்யா நடிப்பில் வெளியான ‘காப்பான்’ படத்தில் விவசாயத்தை அழிக்க வெட்டுக்கிளையை அனுப்புவது நியாபகத்திற்கு வருகிறது.