மதுரை மாவட்டம் மேலூரை சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் அனைத்து கடைகளையும் உடனே மூட உத்தரவிட்டுள்ளனர். டெல்லி மாநாட்டில் சென்று திரும்பிய 9 பேர் வேலூரை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலூரை சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் அனைத்து கடைகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த நிஜாமுதீன் தபிலிஹி மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1,131 பேர் கலந்து கொண்டு சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அதில் 523 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றவர்களை அடையாளம் காணமுடியவில்லை.
நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். மற்றவர்கள் தாங்களாக முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் மேலூரில் 9 பேர் டெல்லி மாநாட்டில் சென்று திரும்பியது தெரியவந்துள்ளதால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.