சிலி நாட்டில் வண்டி சக்கரத்தின் நடுவே மாட்டிக்கொண்டு போராடிய நாயை அவசர சேவை பிரிவினர் பத்திரமாக மீட்ட சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.
சிலி நாட்டில் உள்ள அண்டோபகாஸ்டா நகரில் உள்ள குப்பை தொட்டியில் ஒரு காரின் டயர் ஓன்று கிடந்தது. இதனை அங்கு விளையாடிக் கொண்டிருந்த 8 மாத பெண் நாய் ஒன்று கண்டதும் கார் டயரை தலையால் முட்டி உருட்டி பெறட்டி ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக அதன் தலை அந்த சக்கரத்தின் நடு வட்டத்தில் மாட்டிக்கொண்டது. நாய் எவ்வளவு தான் போராடி பார்த்தும் அதனால் வெளியே எடுக்கமுடியவில்லை.நகர முடியாமல் தவித்து வந்தது. இதனால் நாய் கத்தியது.
இதையடுத்து அந்த நாயை கண்டதும் அருகில் இருந்த சிலர் மீட்க முயற்சி செய்தனர். ஆனாலும் அவர்களால் முடியவில்லை.இதையடுத்து அங்கிருந்த அவர்கள் அவசர சேவைப் பிரிவுக்கு தகவல் கொடுக்க, விரைந்து வந்த அவசர சேவை பிரிவினர் பெட்ரோல் ஜெல்லியை நாயின் கழுத்தில் தடவி லாவகமாக அதன் முகத்தைப் பிடித்து அங்கும் இங்கும் ஆட்டி மெதுவாக உள்ளே தள்ளினர்.
சில நிமிட போராட்டத்துக்குப் பின் நாயின் தலை வெளியே எடுக்கப்பட்டது. நாயே லாவகமாக மீட்ட அவர்களை அங்கிருந்தவர்கள் பாராட்டினர். இதையடுத்து அந்த நாயை அவர்களும் கூடையில் அடைத்து வைத்து கால்நடை மருத்துவரை கொண்டு சிகிச்சை அளித்தனர். இந்த சமூகத்தில் நாயை கண்டால் சிலர் அடித்து துன்புறுத்தி வருகின்றனர். ஆனால் நாய் மாட்டிக்கொண்டதும் அதை வெளியே எடுக்க முயற்சி செய்து, பின் முடியாததால் அவசர சேவைக்கு தகவல் கொடுத்து மீட்டது மனிதாபிமானத்தை வெளிப்படுத்துகிறது.