Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர மீட்டிங்…. விரைவில் அனைத்து கட்சி கூட்டம்‌…. வெளியான முக்கிய தகவல்….!!!!!!

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2019-ம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்காக 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற முறையை கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு அரசியலமைப்பு விதிகளில் இடமில்லை எனக் கூறி அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் 10% இட ஒதுக்கீடு செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாதம்தோறும் 60,000 மேல் வருமானம் பெறும் உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என நீதிமன்றம் அறிவித்தது சமூக நீதிப் போராட்டத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்திருந்தார். காதல் பிறகு இந்த தீர்ப்பு தொடர்பாக சட்ட ஆலோசர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்லப்படும் என முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பின்படி முதல்வர் ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். மேலும் இந்த ஆலோசனைக்கு பிறகு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முக்கிய அறிவிப்பை வெளியிட முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |