நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கிக்கு பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இன்று (டிசம்பர் 1 ) முதல் கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு பிராசஸிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அதன்படி ரூபாய் 99 பிராசஸிங் கட்டணமும், வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்.நேரடி ஷாப்பிங் போதும், ஆன்லைன் ஷாப்பிங் போதும் செய்யப்படும் வர்த்தகங்களுக்கும் பிராசஸிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.