Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை பயன்படுத்தி அரங்கேறும் EMI மோசடி: மக்களை எச்சரிக்கும் வங்கி நிறுவனங்கள்..!

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எஸ்.பி.ஐ, எச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் ஆன்லைன் வங்கி மோசடி குறித்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் இரண்டு வகையான வைரஸ்கள் தற்போது நம்மை தாக்குகின்றன. ஒன்று, கொரோனா வைரஸ்(COVID-19) இன்னோன்று ஹேக்கர்கள் மற்றும் ஆன்லைன் மோசடி செய்பவர்கள். இரண்டு வைரஸ்களும் நம்மை கொள்ளும் என்பது நிதர்சனமான உண்மை. கொரோனா வைரஸ் நமது உயிரை எடுக்கும் மற்றும் ஒரு ஆன்லைன் மோசடி நிதி ரீதியாக தாக்கும். மக்கள் உழைத்து சம்பாதித்த சேமிப்புகளை இந்த மோசடி மூலம் திருடி விடுகின்றனர்.

இந்த திருட்டு சம்பவம் வயதானவர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் சிறிய நகரங்களில் வசிக்கும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோரிடம் அரங்கேறி வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடனுக்கான இஎம்ஐ கட்டுவதில் 3 மாதம் விலக்கு அளித்து RBI அறிவித்ததை தொடர்ந்து, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு 3 மாத விலக்கு அறிவித்துள்ளன. இதைப் பயன்படுத்தி சிலர் ஓடிபி எண், பின் நம்பர் ஆகியவற்றைப் பெற்று மோசடி நடைபெற்று வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, கடந்த சில நாட்களாக ஆக்சிஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் விழிப்புணர்வுச் செய்திகளை அனுப்பி வருகின்றன. இஎம்ஐ செலுத்துவது குறித்து வாடிக்கையாளர்களிடம் பேசும் சைபர் கிரிமினல்கள், மோசடியாளர்கள் வங்கிக் கணக்கின் ஓடிபி எண், ரகசிய எண் ஆகியவற்றைக் கேட்டால் சொல்லாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளன.

Categories

Tech |