எமிரேட்ஸ் விமான நிறுவனம் அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து துபாய் வருவதற்கான விமான போக்குவரத்து தடையானது தொடர உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
விமான சேவையானது கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதியிலிருந்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் முதலீட்டு லிசா, கோல்டன் விசா, எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பங்கேற்பவர்கள், மருத்துவ பணியாளர்கள், பங்குதாரர் விசா உள்ளிட்டோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் அமீரகத்திற்கு மாலத்தீவு, அர்மீனியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து துபாய் செல்வோருக்கான தடையானது அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை தொடரும் என எமிரேட்ஸ் விமான நிறுவனம் புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது. மேலும் இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து துபாய் நகருக்கு விமானங்கள் அடுத்த மாதம் ஏழாம் தேதி வரை இயக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.