விமான சேவைகளின் தடையானது வரும் 7 ஆம் தேதிக்கு பின்னரும் தொடரும் என எதிகாத் மற்றும் எமிரேட்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி வரை பல்வேறு நாடுகளிலிருந்து வரும் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த போக்குவரத்து தடையானது வருகிற 7ஆம் தேதி வரை தொடரும் என எதிகாத் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் இலங்கை வங்கதேசம் போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் விமான சேவை தடையானது கொரோனா பரவல் காரணமாக 7ஆம் தேதிக்கு பின்னரும் நீட்டிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனை இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலுள்ள கொரோனா பாதிப்பு சூழலை பொறுத்தே தீர்வு எடுக்கப்படும் என்று எதிகாத் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே போன்று வருகிற 7ஆம் தேதி வரை எமிரேட்ஸ் விமான நிறுவனமும் இந்நாடுகளிலிருந்து வரும் விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. இதனை நீட்டிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் கோல்டன் விசா பெற்றவர்கள், முதலீட்டு விசா பெற்றவர்கள், தூதரக அதிகாரிகள், எக்ஸ்போ 2020 கண்காட்சி பார்வையாளர்கள், அமீரகத்தைச் சேர்ந்தவர்கள், அரசு தூதுக் குழுவினர் போன்றோருக்கு எந்தவித தடையும் இல்லை என்றும் எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.