புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் மேல் ஏறி நின்ற பெண்ணைக் கண்டு அனைவரும் உறைந்துபோய் நின்றனர்.
உலகின் உயரமான கட்டிடங்களில் ஒன்றான புர்ஜ் கலிஃபா உச்சியின் மீது பெண் பணியாளர் ஒருவர் ‘Fly Better’ என்ற வாசகம் பொறித்த அட்டையுடன் நின்றுகொண்டிருந்தார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் எமிரேட்ஸ் நிறுவனத்தின் விளம்பர சேவைக்காக அவ்வாறு நின்றுள்ளார். இந்த காட்சியானது கமெரா வரை செல்லும் பொது அந்த பெண் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் மேல் நிற்பது தெளிவாக தெரிந்தது. இது குறித்து எமிரேட்ஸ் நிறுவனத்திடம் ஊடகங்கள் ‘அந்த பெண் எவ்வாறு நிற்கிறார், இந்த காட்சியானது செயற்கையானதா அல்லது இயற்கையானதா என்று பல கேள்விகள் எழுப்பியுள்ளனர். இதற்கு எமிரேட்ஸ் நிறுவனம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் ” புர்ஜ் கலிஃபாவின் மேல் நிற்பது உண்மையான பணிப்பெண் அல்ல. அவர் ஒரு வான் சாகச பயிற்றுவிப்பாளர். மற்ற அனைத்துமே அதில் உண்மையாகும்.
Real or fake? A lot of you have asked this question and we’re here to answer it.
Here’s how we made it to the top of the world’s tallest building, the @BurjKhalifa. https://t.co/AGLzMkjDON@EmaarDubai #FlyEmiratesFlyBetter pic.twitter.com/h5TefNQGQe— Emirates (@emirates) August 9, 2021
மேலும் அவரை நாங்கள் தேர்வு செய்து முறையாக பயிற்சி அளித்தோம். அவருடைய பாதுகாப்புக்கென அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. அவர் கட்டிடத்தின் மேலே ஏறும் பொழுது கயிறு ஒன்றால் இணைக்கப்பட்டிருந்தார். ஆனால் அது அவரது சீருடையில் மறைக்கப்பட்டிருந்தது. அந்த பெண்ணும் மற்றவர்களும் கட்டடத்தின் உச்சிக்கு செல்ல சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலானது. இந்த காட்சியானது ஒரு ஆளில்லா விமானம் மூலம் ஒரே முறையில் பதிவு செய்யப்பட்டது” என்று கூறியுள்ளனர். அதிலும் இந்த காட்சியைக் கண்டு அனைவரும் உறைந்துபோய் உள்ளனர். குறிப்பாக புர்ஜ் கலிஃபா கட்டடத்தின் உயரம் சுமார் 838 மீட்டர் ஆகும்.