Categories
உலக செய்திகள்

எம்மாடி 65 வருஷம் குளிக்கல…. அழுகிய இறைச்சி உணவு…. யார் இந்த அழுக்கு மனிதர்…??

நபர் ஒருவர் 65 வருடங்களாக குளிக்காமல் இருந்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் நம் உடலை குளித்து சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைக்க வேண்டும். அப்படி வைத்திருந்தால் தான் நம்மை நோய் நொடிகள் அண்டாது, நாம் ஆரோக்கியமாக வாழ முடியும் ஆனால் ஈரானைச் சேர்ந்த அம்மு ஷாஜி (83) என்ற முதியவர் உலகின் அசுத்தமான மனிதர் என அழைக்கப்படுகிறார்.  ஈரானில் உள்ள கெர்மன்ஷா மகாணத்தில் உள்ள தேஜ்கா என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் விவிலியத்தில் வரும் மோசேவை போல இருப்பதாக பலர் கூறுகின்றனர்.

அவரைப் பொறுத்தவரை அவருக்கு தண்ணீர் என்றாலே பயம். ஆகையால் 65 வருடங்களாக குளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் குளித்தால் உடல் நோய் வாய்ப்படும் என அவர் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு 65 வருடங்களாக ஒரு மனிதர் குளிக்காமல் இருந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் இறந்து போன விலங்குகளின் அழுகிய இறைச்சிகளைதான் சாப்பிடுகிறார். மேலும் அவர் புகை பழக்கத்தை கொண்ட இவர் தனது துருபிடித்த புகைக்கும் குழாயில் விலங்குகளின் மலத்தை இட்டு அதை புகைக்கிறார்.

Categories

Tech |