கிராம நிர்வாக அலுவலரை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நடுக்குப்பம் கிராமத்தில் பூ வியாபாரியான பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசின் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது வீட்டிற்கு பட்டா வாங்குவதற்கு நீண்ட நாட்களாக நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரபு வீடியோவில் பேசிக்கொண்டே குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பட்டா வழங்க அலைக்கழிக்கப்பட்டதாக கிராம நிர்வாக அலுவலரான சீனிவாசனை மாவட்ட ஆட்சியரான பா.முருகேஷ் பணியிடைநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.