விஷப்பூச்சி கடித்து கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சூலக்கரை பகுதியில் கூலித் தொழிலாளியான தனபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மனைவியை பிரிந்து தனது தாயாரான காளீஸ்வரியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனபால் இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது விஷப்பூச்சி கடித்துள்ளது.
அதன் பிறகு தனபாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் உறவினர்கள் தனபாலை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தனபால் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தனபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.