ட்ரான்ஸ்பார்மரில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள சோழபுரம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் வடகரை பாபா நகரில் மின்தடை ஏற்பட்டதால் ஊழியரான ரமேஷ் அங்குள்ள ட்ரான்ஸ்பார்மரில் ஏறி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.