Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென நடைபெற்ற போராட்டம்…. கூலித் தொழிலாளிக்கு நடந்த சோகம்…. விருதுநகரில் பரபரப்பு…..!!

கூலித்தொழிலாளியின் உறவினர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு குடியிருப்பு பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 14 – ஆம் தேதியன்று கிருஷ்ணன்கோவில் செல்லும் சாலையில் தனியார் பார் முன்பு சுபாஷ் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்துள்ளனர். இதனை அடுத்து சுபாஷின் உறவினர்கள் திடீரென உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதாவது மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், சுரேஷின் குடும்பத்திற்கு ஒரு நபருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபாஷின் உறவினர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். அதன்பிறகு சுபாஷின் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

Categories

Tech |