தூய்மைப் பணியாளர் ஒருவர் தன் மரணத்திற்கு முன்பு மூன்று நிமிட வீடியோ ஒன்றை பதிவு செய்து பின்னர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குனியமுத்தூர் பீ.கே புதூரை சேர்ந்த ரங்கசாமி என்பவர் மாநகராட்சி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் முன்பு அவர் பதிவு செய்த மரண வாக்குமூலம் வீடியோவை போலீசார் கைப்பற்றினர். அந்த வீடியோ 3 நிமிடங்களுக்கு பதிவாகி இருந்தது.
அந்த வீடியோவில் ரங்கசாமி மருத்துவமனையில் ஊழியர் ஒருவரும் இளம்பெண்ணும் அறையில் தனிமையில் ஒன்றாக இருந்த காட்சியை பார்த்தேன். இதனை பார்த்த அவர்கள் தன் மீது பெண்கள் ஆடை மாற்றும் போது நான் தவறாக போட்டோ மற்றும் வீடியோ எடுத்ததாக என் மேல் அபாண்டமாகப் புகார் அளித்தனர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இனி என்னால் இந்த சமூகத்தில் வாழ இயலாது. என் சாவுக்கு இந்த 3 பேரும்தான் காரணம் என்று அந்த வீடியோவில் பதிவிட்டு இருந்தார். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மூன்று பேரிடம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.