Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

குற்றவாளிகளை தூக்கிலிட பணியாளருக்கு ரூ80,000 ஊதியம்……!!

உத்திரப்பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்த பவன் ஜல்லாட் குற்றவாளிகள் 4 பேருக்கும் தண்டனையை நிறைவேற்றினார்.

மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா டெல்லியில் 6 கொடூரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதில் முக்கிய குற்றவாளிகளாக இருந்த 4 பேருக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு திஹார் சிறையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்திரப்பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்த பவன் ஜல்லாட் அழைத்து வரப்பட்டார்.

மீரட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே பவன் ஜல்லாட் திஹார் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். நேற்று திஹார் சிறையில் ஒத்திகையை செய்து பார்த்த பவன் இன்று தண்டனையை நிறைவேற்றினார்.4 குற்றவாளிகளையும் தூக்கிலிட பவனிடம் 8 மணிலா தூக்கு கயிறுகளை சிறைத்துறை அதிகாரிகள் அளித்தனர். 8 கயிறுகளில் நான்கை தேர்ந்தெடுத்த பவன் , மீதமுள்ள 4 கயிறுகளை தேவைப்படின் பயன்படுத்த வைத்துக் கொண்டார்.

4 குற்றவாளிகளையும் தூக்கிலிட பவனுக்கு தலா ரூ.20,000 என ரூ 80,000 ஊதியமாக தரப்பட்டது. சிறையில் தனி அறையில் தங்கிய பவன் அதிகாலை 3.30க்கு எழுந்து குளித்து முடித்து தண்டனையை நிறைவேற்றினார். தூக்கிலிடும் பணியில் ஈடுபட்ட பணியாளர் பவனுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் சிறைத்துறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Categories

Tech |