10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர்த்து டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன.. இதனையடுத்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.. அதில், குடிமகன்களுக்கு முக்கியமாக மதுபானக்கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டது..
அதன்படி, டாஸ்மாக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.. இந்த நிலையில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். நாளை இரண்டு மணி நேரம் மட்டும் கடைகளை அடைத்து 12 டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்