Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பழுதான ரயிலை சரி செய்த ஊழியர் உடல் நசுங்கி பலி…… வேலூரில் சோகம்….!!

வேலூரில் பழுதாகி நின்ற ரயிலை சரி பார்த்த ரயில்வே ஊழியர் மீது மற்றொரு ரயில் மோதி அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் கோதண்டபட்டி கிராமம் அருகே பயணிகளை ஏற்றிச் செல்லும் மின்சார ரயிலின் இன்ஜின் பகுதியில் மின்சாரக் கோளாறு ஏற்பட்டதால் பாதி வழியில் ரயில்  நின்று விட்டது. இதனால் சென்னையிலிருந்து சேலம் வழியாக கோயம்புத்தூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் இதர ரயில்கள் காட்பாடி வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டது. பின் பழுதுபார்க்க ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆனதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

Image result for ரயில் மோதி பலி

பின் பழுது பார்க்கப்பட்ட இன்ஞ்சின் பெட்டி மாற்றப்பட்டு புதிய என்ஜின்கள் பொருத்தப்பட்ட பின் தாமதமாக நின்ற ரயில்கள் அனைத்தும் புறப்பட்டனர். பழுதை சரி பார்த்த ரயில்வே ஊழியரான கோபி என்பவர் ரயிலை சீரமைத்த பின் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட கோபி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காவல் துறையினருக்கும் ரயில்வே ஊழியர்களுக்கும் தகவல் அறிவிக்கப்பட அவரது உடலை மீட்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Categories

Tech |