இங்கிலாந்து நாட்டில் வாரத்தில் நான்கு நாட்கள் தான் வேலை என்னும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்து நாட்டின் பல நிறுவனங்களில் வாரத்திற்கு நான்கு தினங்கள் மட்டும் பணியாற்றக்கூடிய திட்டத்திற்கான சோதனை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் இருக்கும் பல வங்கிகள், அனிமேஷன் ஸ்டூடியோக்கள், பராமரிப்பு இல்லங்கள் போன்ற பல்வேறு துறைகளின் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டிருக்கின்றன.
அதன்படி பணியாளர்களால் தங்களது அதிகமான உற்பத்தி திறனை வெளிப்படுத்த முடியும் என்ற புரிதலின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பள குறைப்பு இல்லாமல் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை என்று தீர்மானித்திருக்கிறார்கள்.
இத்திட்டம் பணியாளர்களின் நலன் மற்றும், உற்பத்தித்திறனை பெருக்குவதில் என்ன பங்கு வகிக்கிறது என்பதற்கான ஆய்வை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் நிறுவன அமைப்பாளர்களும் சேர்ந்து மேற்கொள்ள இருக்கிறார்கள். இத்திட்டத்தின் மூலம் நிறுவனங்களும் பணியாளர்களும் நன்மை அடைவார்கள் என்று அவர்கள் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.