சாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள கோசம்பா என்ற இடத்தில் சாலையோரம் வெளி மாநில தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரி அவர்களின் மீது ஏறியதில் 13 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்து விட்டனர். இந்த விபத்தில் காயம் அடைந்த 6 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்தவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் கரும்பு ஏற்றி வந்த மற்றொரு டிராக்டருக்கு வழிவிடும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரியானது சாலையிலிருந்து விலகி அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.