தமிழகத்தில் வருமான வரி மற்றும் வருவாய்த் துறையில் காலியாக உள்ள ஆய்வாளர், வரி உதவியாளார் உள்ளிட்ட பல்வேறு பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடத்திற்கு எஸ்எஸ்சி எனும் அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என பார்க்கலாம்.
நிர்வாகம் : Central Board of Direct Taxation – Income Tax Department -OFFICE OF THE PRINCIPAL CHIEF COMMISSIONER OF INCOME-TAX
தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (SSC)
மொத்த காலியிடங்கள்: 38
பணி விபரம் மற்றும் காலியிடங்கள்:
பணி : Inspector of income tax -12
சம்பளம் : மாதம் ரூ.9,300 – 34,800 + 4,600
பணி : Tax Assistant 16
சம்பளம் : 5,200 முதல் 20,200 +2400
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
பணி : Multi -Tasking Staff -10
சம்பளம் : 5,200 முதல் 20,200 வரை + தர ஊதியம் ரூ.1,800
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு விளையாட்டுத் துறையில் தடகளம், கால்பந்து, ஹாக்கி, கபடி, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் சாதனையாளர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.100 பெண்கள் மற்றும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி/இ.எஸ்.எம்) மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை. இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ssc.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://www.incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/12/SPORTS_QUOTA_Notice_5_1_21.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.