நேரு யுவ கேந்திர சங்கதன் நிறுவனத்திலிருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில் National Youth Volunteer பணிகளுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு 20.02.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நேரு யுவ கேந்திர சங்கதன் பணியிடங்கள் :
National Youth Volunteer பணிகளுக்கு என 13026 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
01.04.2021 அன்று கணக்கீட்டின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 29 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
NYKS கல்வித்தகுதி :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.5,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
NYKS தேர்வுச் செயல்முறை :
கணினி பயன்பாட்டின் உயர் கல்வி தகுதி மற்றும் அடிப்படை அறிவு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 20.02.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரிமூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.