Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “185 காலிப்பணியிடங்கள்”… தமிழகத்தில் அரசு வேலை… உடனே போங்க..!!

தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் கழகத்திற்கான (Tamil Nadu Civil Supplies Corporation) உதவியாளர், பதிவு எழுத்தாளர், பாதுகாப்பு / காவலாளி பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் கழகம்

மொத்த காலியிடங்கள் : 185

பதிவு எழுத்தாளர் – 62

உதவியாளர் – 72

பாதுகாப்பு / காவலாளி – 51

கல்வி தகுதி: 8-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு, டிகிரி

பட்டியல் சமூகத்தினருக்கு மற்றும் பட்டியல் பழங்குடியினரை பொறுத்தவரை வயது தளர்வு என்பது, தற்போதுள்ள மாநில சட்டங்களின்படி பொருந்தும்.

வயது வரம்பு : 18 முதல் 30 வயது வரை

மாத சம்பளம் : ரூ .6,500

கடைசி தேதி: 15.02.2021

ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர் TNCSC வலைத்தளத்திலிருந்து (www.tncsc.tn.gov.in) விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் தேவையான ஆவணங்களுடன் (அடையாளச் சான்று, பிறப்புச் சான்று, கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சமூகச் சான்றிதழ்கள் போன்றவை) பிப்ரவரி 15 அல்லது அதற்கு முன்னர் உள்ளூர் டி.என்.சி.எஸ்.சி அலுவலகத்தில் (TNCSC Office) சமர்ப்பிக்கலாம்.

7th Pay Commission: இந்த மத்திய ஊழியர்களுக்கு DA, HRA, TA சேர்த்து ரூ .2 லட்சம் வரை சம்பளம்

படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி: மூத்த மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் கழகம், எண் 1 சச்சிதானந்த மூப்பனார் சாலை, தஞ்சாவூர் – 613001.

Categories

Tech |