தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
DIALYSIS TECHNICIAN GRADE II (டயாலிசிஸ் டெக்னீசியன் கிரேடு II) பணிக்கு மொத்த 292 காலி பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 01.07.2021 தேதியின் படி 18-லிருந்து 58 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மேல்நிலைப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி அரசு மருத்துவ நிறுவனம் அல்லது மாநில/ மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்த நிறுவனத்திலும் டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் ஒரு வருடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ 20 ஆயிரம்
தேர்வு முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்ப கட்டனம் மற்றும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்.
இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=2071939