தமிழக அரசின் கீழ் செயலாற்றும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கார்ப்பரேஷன் லிமிடெட் (TEXCO) ஆனது அங்குக் காலியாக உள்ள பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. எனவே தகுதியான முன்னாள் படைவீரர்கள் இந்த அரசுப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
டி.ஜி.ஆர் மற்றும் தமிழக அரசு ஊதிய திட்ட நிலைகளின்படி, மொத்தம் 55 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் படைவீரர் கார்ப்பரேஷன் கல்வித்தகுதி :
புதிய பதிவுதாரர்கள் டி.ஜி.ஆர் வசதிகளுக்காகப் பரிசீலிக்கப்படமாட்டார்கள். அவர்களின் நிலை தமிழ்நாடு வரம்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு சேவை திட்டங்களில் குறைந்தபட்சம் 1 ஆண்டு சேவையைப் பூர்த்தி செய்த முன்னாள் சேவையாளர்களுக்கு டி.ஜி.ஆர் வசதிகள் வழங்கப்படும்.
தமிழ்நாடு சேவைப்பணிகளில் குறைந்தபட்ச ஊதியங்கள் மற்றும் டி.ஜி.ஆர் திறன்களுக்கான திட்டத்தில் ஒரு வருட சேவையைவிடக் குறைவாகப் பணியாற்றியோருக்கு டிரான்ஸ்ஃபர் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.
TEXCO தேர்வுச் செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக இந்தப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்போர் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் :
EX-SERVICEMEN ID CARD (கட்டாயம்)
DISCHARGE BOOK (கட்டாயம்)
PPO (கட்டாயம்)
ADHAAR CARD – (கட்டாயம்)
PAN CARD – (கட்டாயம்)
UAN NO
ORIGINAL DRIVING LICENCE FOR DRIVER VACANCY
VOTER ID
RATION CARD
SCHOOL MARK SHEET