கனடாவிற்கு புலம் பெயர்ந்துள்ள பெண் ஒருவர் அந்நாட்டில் வேலை வாய்ப்பு பெறுவது எப்படி என்பது குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
கனடாவிற்கு புலம் பெயர்ந்துள்ள பெண் ஒருவர் அந்நாட்டில் பெண்களும் டிரக் ஓட்டுனராக பணியாற்றலாம் என்று கூறியுள்ளார். அதாவது ட்ரக் ஓட்டுநராவது பெண்களுக்கு கடினமான செயல் அல்ல. கனடாவிற்கு புலம் பெயர விரும்புபவர்கள் முறையான கல்வியைப் பயின்று கனடாவிற்கு வரவேண்டுமென்று கூறியுள்ளார். மேலும் வேலைக்கேற்ற ஊதியம் தங்களுக்கு கட்டாயம் வழங்கப்படும் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கனடாவிற்கு புலம்பெயர்வோராக வருபவர்கள் மாணவர்களாக வருவது நல்லது என்று கூறியுள்ள அந்த பெண் ஒரு மாணவியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் கனடாவிற்கு வந்ததாக கூறியுள்ளார். கனடாவில் வேலை வாய்ப்புகள் பல இருந்தாலும் அவற்றில் டிரக் ஓட்டுநராக பணி செய்வதும் ஒன்று என்று கூறியுள்ளார். இவ்வாறு அந்த பெண்மணியின் உரையை கேட்கும் போதே முறையான பயிற்சி பெற்ற ஒருவரால் கனடாவில் கட்டாயம் வேலை வாய்ப்பினை பெற முடியும் என்ற நம்பிக்கை எழுகிறது.