மத்திய தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி (CSIR) நிறுவனத்திலிருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அந்த மத்திய அரசு நிறுவன அறிவிப்பில் Gr. II (1) / Technician பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் இந்த மத்திய அரசுப் பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
CSIR நிறுவனத்தில் Gr. II (1) / Technician பணிகளுக்கு என 25 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்சம் 28 வயது வரை உள்ளவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.
கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்ட இவ்விரு பணிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Health Safety மற்றும் Environment ஆகிய பிரிவுகளில் ITI அல்லது தேசிய/ மாநில பயிற்சி சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.30,263/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வுச் செயல்முறை :
பதிவாளர்கள் இப்பணிகளுக்கு Trade Test மற்றும் Written Examination மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 08.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்குத் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.