தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் (டி.என்.எஸ்.சி.பி) நிறுவனத்தில் 2021ஆம் ஆண்டிற்கான அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 31.01.2021ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பணி – அலுவலக உதவியாளர்
கல்வி தகுதி – 8ஆம் வகுப்பு தேர்ச்சி
காலிப்பணியிடங்கள் – 53
வருமானம் – ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
வயது வரம்பு – 18 முதல் 35 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.01.2021
பணியிடம் – சென்னை
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tnscb.org/ என்ற இணையத்தளத்தை அணுகவும்.