Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதை வச்சி கண்டுபிடிச்சிருவோம்…. தொங்கவிடப்பட்ட காலி பாட்டில்கள்… பொதுமக்களின் புது முயற்சி…!!

காட்டு யானைகளின் நடமாட்டத்தை அறியும் பொருட்டு கிராம மக்கள் வீடுகளில் காலி பாட்டில்களை தொங்கவிட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர், கூடலூர், தேவாலா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகள் வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. இந்நிலையில் வண்டலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் இருக்கும் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் பொதுமக்கள் கயிறு கட்டி பாட்டில்களை தொங்க விட்டுள்ளனர்.

அதாவது காட்டு யானைகள் இந்த பாட்டில்களை கடந்து செல்லும்போது அது ஒன்றோடு ஒன்று உரசி எழுப்பும் சத்தம் கேட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது. இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறும் போது, நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் வருவதை அறியும் பொருட்டு காலி பாட்டில்களை கட்டித் தொங்கவிட்டுள்ளதாகவும், அதனை கடக்கும்போது எழும் சத்தத்தை வைத்து யானைகளின் நடமாட்டத்தை அறிந்துகொள்வோம் எனவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |