Categories
அரசியல் தேசிய செய்திகள்

வீடுகளை காலி செய்யுங்கள்… MPகளுக்கு நோட்டீஸ்..!!

முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் சுமார் 200 பேர் இன்னும் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரலில் நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் 16-ஆவது மக்களவையை கலைத்து மே மாதம் 25_ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மக்களவைக்கு புதிய MP-க்கள் தேர்வாகி பொறுப்பேற்றனர். புதிய மக்களவை தேர்வாகி கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகியும் முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதிதாக மக்களவைக்கு தரவாகி வந்துள்ள எம்.பி.க்கள் நட்சத்திர விடுதியில் தங்க கூடாது என்று மத்திய அரசு தெரிவித்தது.

Image result for mp houses in delhi

மேலும் அவர்களுக்கு டெல்லி லுட்யென்ஸ் பகுதியில் உள்ள தற்காலிக பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.ஏன் புதிய மக்களவை உறுப்பினர்களுக்கு அரசு பங்களா ஒதுக்க வில்லை என்றால் முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் 200-க்கும் அதிகமானோர் தங்களின் அரசு பங்களாவை காலி செய்யவில்லை. மக்களவை கலைக்கப்பட்டதும் 2 மாதத்தில் தங்கி இருந்த அரசு பங்களாவை காலி செய்திட வேண்டும் என்ற சூழலில் இதுவரை காலி செய்யமால் இருக்கின்றனர். இந்நிலையில் வீடுகளை காலி செய்யாமல் காலம் தாழ்த்தும் பழைய 200 எம்பிக்களுக்கு வீடுகளை உடனடியாக காலி செய்யக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது இந்த உத்தரவை மீறினால் குடிநீர் மின்சாரம் உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |