பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்..9 ஆம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இப்போது வரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். தற்போது 10 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்த நிகழ்ச்சி 73வது நாட்களை நெருங்கி உள்ளது.
இந்த லையில் நேற்று வெளியாகிய 3வது புரோமோவில் போட்டியாளர்கள் கடந்த கால நினைவுகளை பகிரக்கூடிய டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கடந்த கால நினைவுகளை பகிர்ந்தனர். அப்போது போட்டியாளர் ரக்ஷிதா, “நான் கடவுள் கிட்ட கேக்குறது ஒன்னே ஒன்னு தான்.
இதுக்கு அப்புறம் என் வாழ்க்கையில் என்ன நடக்குமென்று எனக்கு தெரியாது. மேலும் குழந்தையோட அமைப்பு இருக்கா என்றும் எனக்கு தெரியாது. இதனால் என் அம்மா தான் எனக்கு குழந்தை. கடவுள் அந்த குழந்தைய கடைசி வரைக்கும் என் கூட கொடுக்கனும். அந்த குழந்தையை நான் நல்லபடியா பாத்துக்கணும்” என்று கதறி அழுத படி கூறினார். இந்த புரோமோ வீடியோவானது தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.