Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு திடீர் முடிவு?…. ஒரு நாளைக்கு முன்பே முடிவு எடுத்தாச்சு…. என்ன காரணம்?….!!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 29-ஆம் தேதி அன்று தொடங்கியது. அப்போது 26 மசோதாக்களை இரு அவைகளிலும் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து இருந்தது. முதல் நாள் அன்றே 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றி காட்டியது. இது ஓராண்டாக நடந்து வந்த விவசாயிகளின் நீண்ட நாள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 12 எம்.பிக்கள் கூட்டத்தொடர் முழுவதிலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் சேவைக்காலம் குறித்த திருத்த மசோதா 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்து நிறைவேற்றிஉள்ளார். அதன்பின் டெல்லி சிறப்பு காவல்துறை திருத்தச்சட்டம் 2021 இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலமாக குறிப்பிட்ட குற்றங்களை விசாரிக்கும் உரிமை, டெல்லி சிறப்பு காவல்துறை இயக்குனரின் பதவிக்காலம் நீட்டிப்பு உள்ளிட்டவை அமலுக்கு வருகின்றது.

இதேபோன்று மத்திய புலனாய்வு ஆணையங்களின் இயக்குனர்கள் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து விதமாக திருத்த மசோதா 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்பாக இந்த இயக்குனர்களின் பதவிக்காலம் 5 வருடங்கள் மட்டுமே இருந்தது. இதன் தொடர்ச்சியாக சட்டவிரோத கடத்தலுக்கு நிதி உதவி செய்பவர்களை தண்டிப்பது குறித்து போதை பொருள் தடுப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இது கடந்த செப்டம்பர் மாதம் அவசர சட்டமாக அமுலுக்கு வந்தது. தேர்தல் சீர்திருத்த மசோதா 2021 மக்களவையில் கடந்து 20 ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்டது. அடுத்து மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலமாக வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். 18 வயது நிரம்பிய குடிமக்கள் ஆண்டுக்கு 4 முறை வாக்காளர் அடையாள அட்டையில் தங்களது பெயரை இணைத்துக்கொள்ள வாய்ப்பு உருவாகும். தேர்தல் காலங்களில் பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி பிற கட்டிடங்களையும் தேர்தல் ஆணையம் தற்காலிகமாக கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள முடியும். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் கடும் அமளிக்கு மத்தியில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Categories

Tech |