சட்டவிரோதமாக மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கீழ்முருங்கை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வருவது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று சட்டவிரோதமாக மணல் கடத்திய கீழ்முருங்கை பகுதியைச் சேர்ந்த ரமேஷ், சங்கர் ஆகியோரை கைது செய்ததோடு 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.