தென்காசியில் உள்ள கோழிப் பண்ணையில் இருந்து மூன்று மூட்டை கோழி தீவனத்தை திருடியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் மேலக்கடையநல்லூர் பகுதியில் முகைதீன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றை வைத்து பராமரித்து வருகின்றார். இந்நிலையில் முகைதீன் கோழிப்பண்ணையில் இருந்து 3 மூட்டை கோழிக்கு போடப்படும் தீவனத்தை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து முகைதீன் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் முகைதீன் கோழிப்பண்ணையில் வேலை பார்த்த மாரியப்பன் மற்றும் வேலுசாமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.