திமுக உட்கட்சி தேர்தலில் இறுதி கட்டமாக தலைவர் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பொதுக்குழு சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் போட்டி என்று தேர்வின்றி வெற்றி பெற்றார். அதன் பிறகு பேசிய அவர், த பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி அமர்ந்த இடம் இது. ஆனால் நான் அண்ணாவும் கலைஞரோ அல்ல கலைஞரால் பாராட்டப்பட்டு தலைவரானவன் நான். கலைஞர் மறைவிற்குப் பிறகு இந்த எளியன் தலைமையில் தலைமை பொறுப்பு சுமத்தப்பட்டது. உழைப்பு உழைப்பு என பாராட்ட பெற்றதால் கிடைத்த பொறுப்பு. அதனை தொடர்ந்து தொண்டர்கள் இருக்கும் தைரியத்தில் தான் இந்த பொறுப்புக்கு வந்துள்ளேன். கட்சியின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் சிலர் ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சனைகளை உருவாக்கி துக்கம் இல்லாத இரவுகளை தருகிறீர்கள். கட்சித் தலைவர் மற்றும் தொண்டர்கள் தங்கள் செயல்களிலும் வார்த்தை பிரயோகங்களிலும் கவனமாக இருக்குமாறு என்று அறிவுறுத்தி உள்ளார்.
இதனையடுத்து திமுக 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகள் அரியனையை அலங்கரிக்க வேண்டும் என்பது அக்காட்சியின் தலைவரும் முதல் வருமான ஸ்டாலின் விருப்பமாகும் உள்ளது. அதன்படி ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்தே அவர் மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகிறார். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் விமர்சனங்களும் எழும்பும் போதெல்லாம் குறைகள் சுட்டிக்காட்டப்படும் போதெல்லாம் அதற்கு செவி சாய்த்து பொறுப்புடன் முதிர்ந்த அரசியல்வாதியாக அதனை கையாண்டு வருகிறார். அதே நேரத்தில் திமுகவில் அமைச்சர்கள் தொடங்கி கவுன்சிலர்கள் வரை மேல்மட்ட கீழ்மட்ட வரை அடுத்தடுத்த நிர்வாகிகள் சர்ச்சைகளின் சிக்கி வருகின்றனர். அதாவது அரசாங்க ரீதியாக திமுக அமைச்சர்கள் பலரும் அடுத்தடுத்த சர்ச்சுகள் சிக்கி வருகின்றார்கள். ராஜ கண்ணப்பா சாதி ரீதியான சர்ச்சையில் சிக்கினார், அமைச்சர் பொன்முடி ஓசி பஸ் விவகாரத்தில் சிக்கினார், குறவர் சமூகப் பிரதிநிதித்துவம் தொடர்பான விவகாரத்தில்வன வேங்கைகள் கட்சித் தலைவர் இரணியன் நிற்க்க வைத்து ஒருமையில் பேசியதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் ராமச்சந்திரன் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ஆம்னி பேருந்து கட்டணம் குறித்து அமைச்சர் சிவசங்கர், கே.என்.நேரு, துறைமுருகன் உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இது குறித்து ஸ்டாலின் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். “எக்காலம் கொண்டு சொல்லிலும், செயலிலும் அலட்சியமாக போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள். கவனமுடன், பொறுப்புடனும் கண்ணியம் தூளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள் என்று அமைச்சர்களுக்கு கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளார். அவ்வாறு குறைகளோ தவறுகளோ வந்தால் நடவடிக்கை எடுக்க சிறிதும் தயங்க மாட்டேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் பொதுக்குழு மேடையிலே அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிலரில் நடவடிக்கைகள் தனக்கு தூக்கமற்ற இரவுகளை தருவதாக ஸ்டாலின் வெளிப்படையாக பேசியது சில அமைச்சர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் பிறகும் சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கும் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொதுக்குழு சுமுகமாக நடைபெறவே இத்தனை காலம் ஸ்டாலின் அமைதியாக இருந்தார். இனிமேல் ஏதாவது நடக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டார் என்று அறிவாளி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.