திருவள்ளூரில் பூ வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு அருகே உள்ள பாஞ்சாலை கிராமத்தில் வசித்து வந்த பாபு என்பவர் பூ வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவரது மகன் பொறுப்பில்லாமல் இருப்பதைக் கண்டு பாபு மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் இவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாதிரிவேடு சப் -இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.