பாலிவுட்டில் சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் அமிதாப் பச்சன். இதில் அமிதாப் பச்சன் என்றாலே 6 அடி உயரத்துக்கும் அதிகமான அவரது தோற்றம் தான் முதலில் நினைவுக்கு வரும். திரையுலகில் கூட அவருக்கு உயரம் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக இருந்தது. எனினும் மற்றவர்கள் நினைப்பது போன்று உயரம் எனக்கு எப்போதும் பிளஸ் பாயிண்டாகவும், எந்நேரமும் மகிழ்ச்சியையும் தந்தது இல்லை என அமிதாப் பச்சன் அண்மையில் ஒரு பேட்டியில் கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது “நான் படித்த பள்ளியில் பாக்ஸிங் என்பது கட்டாயமாக இருந்தது. என் உயரம் அதிகம் என்பதால் என்னை சீனியர் மாணவர்கள் இருக்கும் டீமில் இணைத்துவிட்டனர். இதனால் பல நாட்கள் என் உயரம் காரணமாக அவர்களிடம் நான் அடியும், திட்டும் வாங்கியது உண்டு. எனது உயரம் தனக்கு சில நேரங்களில் துயரமாக மாறிய நிகழ்வு குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.