குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை தனக்கு நடந்த சிறிய விபத்து பற்றி கூறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிப் போட்டியை நோக்கி நகர்ந்து வரும் இந்த நிகழ்ச்சியில் தற்போது அஸ்வின், பவித்ரா, பாபா பாஸ்கர் ,ஷகிலா, கனி ஆகியோர் விளையாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வரும் மணிமேகலை நேற்று தனக்கு சிறிய விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த நிகழ்ச்சியில் இரண்டு வாரங்கள் கலந்து கொள்ள முடியாது எனவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனக்கு நடந்த விபத்து குறித்து மணிமேகலை கூறியுள்ளார். அதில் கொதிக்கும் நீரை வேறு பாத்திரத்தில் ஊற்ற முயற்சி செய்தபோது மொத்தமாக அவரது காலில் ஊற்றி கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனால் கால் தோல்கள் பிரிந்து வர தொடங்கியதால் மருத்துவரின் அறிவுரைப்படி தற்போது மணிமேகலை வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.