சென்னையில் பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா நடித்துள்ள ‘செம்பி’ பட விழா நடைபெற்றது. இதில் நடிகர் கமலஹாசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பலருக்கு கேமரா ஆன் பண்ணியவுடன் அழுகை, சிரிப்பு எதுவும் வராது. நடிப்பு வாய்ப்பு தேடும் காலத்தில் என்னையே பலர் திட்டுகிறார்கள். 16 வயதினிலே படத்தில் என்ன சார் கோவணம் எல்லாம் கட்டிக்கிட்டு என்று சொன்னார்கள். ஆனால் இப்போது அந்த படத்தை கொண்டாடும்கிறார்கள். அதைக் கேட்க சந்தோஷமாக இருக்கிறது. ஒரு பெரிய படமா என்பது சின்ன படமா என்பது காலம் கடந்து பேசப்படுவதில் தான் இருக்கிறது.
இப்போது 16 வயதினிலே படத்தை பேசுகிறார்கள். அது தான் எனக்கு பெரிய படம். இத்தனை கோடியில் எடுத்தோமே அது என்ன படம் என கேட்டால் அது பெரிய படம் இல்லை. ரசிகர்கள் நல்ல படத்தை பாராட்ட வேண்டும் நல்லா இல்லை என்றாலும் தைரியமாக சொல்ல வேண்டாம். அப்போதுதான் சினிமா வளரும். நல்ல படத்திற்கு தான் என் ஆதரவு எப்போதும் இருக்கும். பெரும் திறமையாளர்கள் என கண் முன்னால் வாய்ப்பில்லாமல் அழிந்து போயிருக்கிறார்கள். அதனால் நல்லவற்றை பாராட்ட தயங்காதீர்கள். மேலும் செம்பி படம் நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.